முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற மேல்சபை எம்.பியாக நடிகை ரேகா பதவியேற்பு

புதன்கிழமை, 16 மே 2012      சினிமா
Image Unavailable

புது டெல்லி, மே. - 16 - பாராளுமன்ற மேல்சபை எம்.பியாக கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், நடிகை ரேகா ஆகியோர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்களது 6 ஆண்டு பதவிக்காலம் கடந்த மாதம் 27 ம் தேதி துவங்கியது. காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படவே டெண்டுல்கர் மற்றும் ரேகாவுக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் இருவரும் பதவியேற்காமல் இருந்தனர். அவர்கள் மீதான சர்ச்சை முடிவுக்கு வந்ததும் அவர்கள் பதவியேற்கலாம் என்று ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.  இதையடுத்து நேற்று ரேகா மேல்சபை எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். நடிகர் ஜெமினி கணேசனின் மகளான இவர் 1980 களில் இந்திப் படவுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். சிறந்த நடிப்புக்காக பல தேசிய விருதுகளை பெற்றவர். திரையுலகிற்கு அவர் செய்த சேவையை பாராட்டும் வகையில் அவருக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் இன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்