முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி -20 டெல்லி டெவில்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தியது

வியாழக்கிழமை, 17 மே 2012      விளையாட்டு
Image Unavailable

டெல்லி, மே. - 17 - 5 -வது ஐ.பி.எல். போட்டியில் டெல்லி யில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெ ல்லிடேர்டேவில்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ் சாப் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் டெல்லி அணி தர ப்பில், ஜெயவர்த்தனே அபாரமாக பே ட்டிங் செய்து அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பக்கபலமாக, என். ஓஜா, இர்பான் பதான், வார்னர் ஆகி யோர் ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, டெ ல்லி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி பஞ் சாப் அணியின் ரன்ரேட்டைக் கட்டுப் படுத்தினர். டெல்லி அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 முக்கிய விக்கெட்டை வீழ்த்தி அந்த அணியின் சரிவைத் துவக் கி வைத்தார். ஐ.பி.எல். போட்டியின் 64 -வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோ சா கோட்லா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கேப்டன் சேவாக் தலைமையிலான டெல்லிடே ர்டெவில்ஸ் அணியும், கேப்டன் டேவி ட் ஹஸ்சே தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவ ன் பஞ்சாப் அணி டெல்லியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய து. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற் கு 136 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 1 வீரர் மட்டும் கால் சதத்தை எட்டினார். தற்காலிக கேப்டன் டேவிட் ஹஸ்சே அதிகபட்சமாக, 35 பந்தில் 40 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்று ம் 1 சிக்சர் அடக்கம். மந்தீப் சிங் 12 பந் தில் 21 ரன்னை எடுத்தார். இதில் 5 பவு ண்டரி அடக்கம். தவிர, நிதின் சைனி 15 ரன்னையும், ஷான் மார்ஷ் 13 ரன்னையும், பி. சாவ்லா 10 ரன்னையும் எடுத் தனர். டெல்லி அணி தரப்பில் முன்னணி வே கப் பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் 21 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். தவிர, ஆரோன் 2 விக்கெட்டை யும், நெகி 1 விக்கெட்டையும் எடுத்தனர். டெல்லி அணி 137 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ் சாப் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19 ஓவரில் 5 விக்கெ ட் இழப்பிற்கு 140 ரன்னை எடுத்தது.
இதனால் டெல்லி அணி இந்த லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. டெல்லி அணி தரப்பில், ஜெயவர்த்த னே 49 பந்தில் 56 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். கீப்பர் என். ஓஜா 29 பந்தில் 34 ரன்னை எடுத் தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக் சர் அடக்கம். தவிர, இர்பான் பதான் 19 ரன்னையும், வார்னர் 14 ரன்னையும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பில், அவானா 22 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். பிரவீன் குமார் மற்றும் பி. சாவ் லா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயக னாக உமேஷ் யாதவ் தேர்வு செய்யப்ப ட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்