முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் போட்டியை நிறுத்திவிட லல்லு யோசனை

சனிக்கிழமை, 19 மே 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.19 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்திவிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் யோசனை கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டு போட்டியை இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் ரசித்து பார்க்கிறார்கள். அதனால் ஒரு சிறிய அளவில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடந்தாலும் அதை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கட்டணம் செலுத்து பார்த்து வருகிறார். இதை ஒரு சில சூதாட்டக்காரர்களும் சுயநலமிகளும் பயன்படுத்தி பணம் சம்பாரிக்க தொடங்கிவிட்டணர். சபல புத்தியுள்ள ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை தம் இஷ்டம்போல் விளையாட செய்வது அம்பலமாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கூட இந்த மாதிரி சூதாட்டம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அப்பாவி ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் பிரபல இந்தி நடிகர் சாருக்கானுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

இந்தநிலையில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் நேற்று பாராளுமன்ற கூட்டத்திற்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். சாரூக்கானுக்கும் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு மேற்கண்டவாறு லல்லு பதில் அளித்தார். வான்கடே ஸ்டேடியத்தில் சாருக்கானுக்கும் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த மோதலின்போது போலீசார் வேடிக்கை பார்த்துகொண்டியிருந்ததோடு அவர்கள் சில அரசியல் கட்சிகள் சொல்படி நடந்திருக்கிறார்கள். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என்றும் லல்லு மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்