முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரிட்சை

திங்கட்கிழமை, 21 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

புனே, மே. 22 - 5 -வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியி ல் புனேயில் இன்று நடக்க இருக்கும் முதலாவது அரை இறுதிப் போட்டியி ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. 

சேவாக் தலைமையிலான டெல்லி அணி புள்ளிகள் தரவரிசையில் முதலிடம் பெற்ற அணியாகும். கேப்டன் காம் பீர் தலைமையிலான அணி 2-வது இட ம் பிடித்த அணியாகும். டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு அணிகளும் பேட்டிங் மற்றும் பெளலிங் ஆகிய இரண்டிலும் சமபலம் பெற்ற அணிகளாகும். எனவே இந்த முதல் அரை இறுதிப் போட்டி ரசிகர்க ளின் ஆர்வத்தை நிறைவேற்றும் வகை யில் அனல் பறந்ததாக இருக்கும். 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 4 -ம் தேதி தொட ங்கியது. நேற்று முன் தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. 

5 -வது ஐ.பி.எல். போட்டியில் இதுவ ரை 72 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதன் முடிவில் டெல்லி அணி 11 வெற்றி, 5 தோல்வியுடன் 22 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 வெற்றி, 5 தோல்வியுடன் (ஒரு போட்டி யில் முடிவு இல்லை), 21 புள்ளிகள் பெ ற்று இரண்டாவது இடத்தைப் பிடித் தது. 

ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 10 வெற்றி, 6 தோல்விகளுடன் 20 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆகிய இரண்டும் 8 வெற்றி 7 தோல்வி யுடன் (ஒரு முடிவு இல்லை) தலா 17 புள்ளிகள் பெற்றன. ஆனால் பெங்களூ ரை விட சென்னை ரன் ரேட்டில் முன் னிலை பெற்று 4 -வது இடத்தைப் பிடி த்தது. சென்னை அணியின் ரன்ரேட் பிளஸ் 0.100 ஆகும். பெங்களூர் அணியி ன் ரன் ரேட் மைனஸ் 0.002 ஆகும். 

முதல் 4 இடத்தைப் பிடித்த டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 அணிகளும் அரை இறுதிச் சுற்றுக்கு (பிளே ஆப்) தகுதி பெற்றன. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5 -வது இடத்தையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6-வது இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7 -வது இடத்தையும், டெக் கான் சார்ஜர்ஸ் 8 - வது இடத்தையும், புனே வாரியர்ஸ் 9 -வது இடத்தையும் பிடித்தன. 

நேற்று ஓய்வு நாளாகும். பிளே ஆப் சுற் று இன்று துவங்குகிறது. புனேயில் இன் று நடைபெறும் ஆட்டத்தில் முதலிடத் தைப் பிடித்த டெல்லி அணியும், 2 -வது இடத்தைப் பிடித்த கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெ றும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடி யாக தகுதி பெறும். 

தோல்வி அடையும் அணி வெளியேறாது. அந்த அணிக்கு மேலும் வாய்ப்பு உள்ளது. தோற்கும், அணி அடுத்து நட க்க இருக்கும் மும்பை - சென்னை இடையே நடக்கும் போட்டியில் வெ ற்றி பெறும் அணியுடன் மோதும். 

டெல்லியும், கொல்கத்தாவும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். டெல்லி அணியில் சேவாக், ஜெயவர்த்த னே, வார்னர், மார்கெல், டெய்லர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கெளதம் காம்பீர், காலிஸ் , மெக்குல்ல ம், பிரட்லீ, நரீன், மனோஜ் திவாரி போன்ற சிறந்த வீரர்கள் இடம் பெற்று  உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் அவர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படு த்த ஆயத்தமாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்