முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்காளம், கேரளாவில் பிரதமர் மன்மோகன் பிரசாரம்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.- 30 - காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அசாம்,மேற்குவங்காளம், கேரளாவில் பிரதமர் மன்மோகன்சிங் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். முதலில் அவர் அசாம் மாநிலத்தில் ஒரு நாள் பிரசாரம் செய்வார் என்று தெரியவந்துள்ளது. 126 தொகுதிகளை கொண்ட அசாமில் வரும் 4 -ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. பிரசாரம் ஓயும்கடைசிநாளன்று அசாம் செல்ல பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டுள்ளார். கவுகாத்தியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் 2 அல்லது 7 -ம் தேதி அவர் பிரசாரம் செய்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரதமரின் அசாம் பிரசார பயணம் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் வரும் 13-ம் தேதி ஒரேநாளில் தேர்தல் நடைபெற உள்ளது. 

அசாமில் பிரசாரம் செய்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங் கேரளா வர உள்ளார். அனேகமாக அடுத்த வார இறுதியில் அவர் கேரளா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இரண்டு அல்லது மூன்று பொதுக்கூட்டங்களில் பிரதமர் மன்மோன்சிங் பேசுவார் என்று தெரிகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரதமர் மன்மோகன்சிங் எப்போது பிரசாரம் செய்வார் என்பது இன்னமும் உறுதி செய்யபடவில்லை. 

294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்குவங்காளத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  வரும் ஏப்.18,23,27 நடக்கிறது. மே 3,7,10 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஏப்ரல் 2-வது வாரத்தில் மேற்கு வங்காளத்தில் பிரதமர் மன்மோ கன்சிங் பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்