முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்ராகிம் ராவுத்தர் கூட்டும் கூட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      சினிமா
Image Unavailable

சென்னை, மே.25 - இப்ராகிம் ராவுத்தர் கூட்டும் படஅதிபர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு   ஐகோர்ட்டு  இடைக்கால தடை விதித்துள்ளது படஅதிபர்கள் சங்க  அட்ஹாக் கமிட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர்  வருகிற 30-ந்தேதி சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு தடைவிதிக்க கோரி ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் தாணு சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:
கடந்த ஏப்ரல் 15​ந்தேதி தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி அமைக்கப்பட்டது. அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளராகிய நான் ஆகிய மூவரும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.   அட்ஹாக் கமிட்டியில் எடுத்த முடிவை எதிர்த்து தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் வருகிற 30-ந்தேதி பட அதிபர் சங்க பொதுக்குழு கூடும் என இப்ராகிம் ராவுத்தர் அறிவித்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.   
இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது தாணு சார்பாக மூத்த வக்கீல் வி.டி.கோபாலன் ஆஜராகி, தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், அட்ஹாக் கமிட்டி செயல்பட தடைவிதிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பிரதான வழக்கு ஜூன் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் அட்ஹாக் கமிட்டி 30-ம் தேதி பொது குழு நடக்கும் என்று அறிவித்துள்ளது. இது சட்ட விரோதமானது. எனவே கமிட்டி பொது குழுவை நடத்த தடைவிதிக்க வேண்டும்  என்றார். இதைகேட்ட நீதிபதி அட்ஹாக் கமிட்டி வரும் 30-ம் தேதி பொதுகுழு நடத்த இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago