முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையில் தகவல் பரிமாற்றம் செய்ய இந்தியா - பாக்.சம்மதம்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. மார்ச்.- 30 - மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதென இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பாடு செய்து கொண்டுள்ளன. சுமார் 9 மாத இடைவெளிக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது. 

இந்த பேச்சுவார்த்தை நேற்றும் நீடித்தது. இந்தியா சார்பில் உள்துறை செயலாளர் கோபால்.கே. பிள்ளைதலைமையில் 17 அதிகாரிகளும் பாகிஸ்தான் சார்பில் அதன் உள்துறை செயலாளர் சவுதாரி காமர் ஜாமன் தலைமையில் 17 அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

மும்பை தாக்குதல்  சம்பவ வழக்கு விசாரணையில் இரு நாடுகளும்  தகவல்களை பரிமாறிக்கொள்வதென்றும் இதற்காக இரு நாடுகளுக்கு  இடையே ஹாட்லைன் வசதியை ஏற்படுத்துவது என்றும்  ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதே போல சம்ஜ்ஹவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு  சம்பவம் தொடர்பான தகவல்களையும் பரிமாறிக்கொள்ளது  என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இரு நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு  இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை  வெளியிடப்பட்டுள்லது. அந்த கூட்டறிக்கையில் இநத விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாத தலைவர்களிடம் விசாரணை நடத்த இந்திய குழுவை பாகிஸ்தான் அனுமதிக்கும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதே போல மும்பையில் சாட்சிகள் சிலரிடம் பேட்டி காண பாகிஸ்தான்  குழு ஒன்று இந்தியாவுக்கு  வரும்.  இது தொடர்பாகவும்  உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசா வழங்குவது தொடர்பாக கூட்டு செயல்திட்ட குழு ஒனறை உருவாக்குவது என்றும் உடன்பாட்டில்  கூறப்பட்டுள்ளது.

நேற்று  5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய இரு உள்துறை செயலாளர்களும்  இந்த பேச்சு  சாதகமாகவும் சரியான திசையிலும்  சென்றதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்