முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயங்கினேன் தயங்கினேன் படத்துக்கு வரிவிலக்கு

திங்கட்கிழமை, 28 மே 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.29 - மயங்கினேன் தயங்கினேன் தமிழ் திரை படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- எஸ்.டி. வேந்தன் கதை, திரைக்கதை வசனத்தில் உருவாகி உள்ள படம் மயங்கினேன் தயங்கினேன், இந்த படத்தை ராஜேஸ்வரி வேந்தன் தயாரிக்கிறார். இதில் நித்தின் சத்யா, தேஜாஸ்ரீ, திஷா பாண்டே, கஞ்சா கருப்பு, புது முகம் பாலா என பலர் நடித்து உள்ளனர்.

மனநல காப்பகம் முதியோர் இல்லம் குழந்தைகள் காப்பகம் போன்ற இடங்களில் நடக்கும் சீர்கேடுகளை சுட்டிக் காட்டி மக்களுக்கு பயன்படும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. படம் சென்சாருக்கு சென்றுள்ளன. அங்கே மயங்கினேன் தயங்கினேன் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சில ஆபாச காட்சிகளை நீக்கி உள்ளனர். குறிப்பாக தேஜாஸ்ரீ நடித்து முடித்தக் காட்சி மற்றும் ஒரு பாடல் காட்சியை நீக்கி உள்ளனர். இந்த காட்சிகளை போல இன்னும் பல இடங்களில் கட்செய்துள்ளனர். மொத்தம் 100 இடங்களில் கட் கொடுத்துள்ளனர். இதனால் அரை மணி நேரம் காட்சிகள் படத்தில் குறைக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் வரிவிலக்கு அளிக்க அரசு நியமித்துள்ள குழுவினர். இந்தப்படத்தின் கதை சமூக சிந்தனையோடு உள்ளது. மக்களுக்கு போய் சேர வேண்டிய கருத்துகளும் அதிகம் இருக்கிறது என்று இயக்குனரை பாராட்டி வரிவில்ககு அளித்துள்ளனர். படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. முன்பெல்லாம் திரைப்படங்களுக்கு அரசு வரிவிலக்கு அளித்தால் அது மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது. இப்போது பட தயாரிப்பாளர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்