முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் பீகார் சட்டசபையில் அமளி

புதன்கிழமை, 30 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

தனக்கு மொபைல் போனில் கொலை மிரட்டல் வந்துள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை  சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் பிரச்சினையை கிளப்பியதை அடுத்து பீகார் சட்டசபையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பீகார் மாநில சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை  சேர்ந்த தினேஷ் பிரசாத் சிங் ஒரு பிரச்சினையை கிளப்பினார்.

தனக்கு  மொபைல் போனில் மிரட்டல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதை அடுத்து சபையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

தனக்கு  மொபைல் போனில் வந்த மிரட்டலில் அடுத்த 48 மணி நேரத்தில் தன்னை ஒழித்துக்கட்ட இருப்பதாக கூறப்பட்டது என்றார்.

எனவே தனக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பீகார் போலீசார் ஆமை வேகத்தில்  செயல்படுவதாகவும் அவர்  குற்றம்சாட்டினார்.

இந்த எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக இவரது கட்சியை  சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளை விட்டு எழுந்து குரல் கொடுத்தனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் நிதீஷ் குமார் இந்த விஷயம் குறித்து தான் தெரிந்து கொண்டுள்ளதாகவும் இது குறித்து  முழுமையான விசாரணை நடத்த டி.ஜி.பி. நீல்மணிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

இநத பிரச்சினையை சீரியசாக அரசு எடுத்துக்கொண்டுள்ளது என்றும்  இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை  அரசு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்