முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே ஆண்டில் சாதித்து காட்டிய தலைவி ஜெயலலிதா

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      சினிமா
Image Unavailable

 

மண்டபம்,மே.29 - மண்டபத்தில் நடந்த ஓர் ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் கலந்து கொண்டு  நூறாண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் சாதித்து காட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று பேசினார்.

மண்டபத்தில் தமிழக அரசு பொறுப்பேற்று ஓர் ஆண்டுகாலம் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் மண்டபம் ஒன்றிய செயலாளரும் மண்டபம் பேரூராட்சி தலைவருமான தங்கமரைக்காயர்  தலைமையில்  பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினார். நகர் செயலாளர் சீமான் மரைக்காயர் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து இராமநாதபுரம் நகராட்சி தலைவர் சேகர், இராமேஸ்வரம் நகராட்சி தலைவர் அர்சுணன் , மாவட்ட மீனவரணி செயலாளர் தர்வேஸ், பொகுழு உறுப்பினர் ஜெய்லாணி சீனிகட்டி, செளந்திரவள்ளி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாலசிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பூமிநாதன், ஒன்றி இளைஞர் அணி இணை செயலாளர் சீனிகாதர், நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜாகிர் உசேன்,  தலைமை கழக பேச்சாளர் மா.மைதீன் இராமேஸ்வரம் துணை சேர்மன் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு  பேசினர். விழாவில் நடிகர் குண்டுகல்யாணம் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா உலகிலேயே எந்த அரசும் செய்யாத செய்யமுடியாத சாதனைகளை செய்துள்ளார். நூறாண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை முதல்வர் பதவி ஏற்று ஒரு வருடத்தில் செய்து முடித்துள்ளார். கல்விக்கு அகில இந்திய அளவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை தமிழக முதல்வர் செய்து காட்டியுள்ளார். கல்விக்கு அதிக நிதி  ஒதுக்கிய நமது முதல்வரை வடமாநிலத்தவர் அனைவரும் பாராட்டுகின்றனர். மக்களுக்கு எது வேண்டும் என்று யோத்து யாரும் கேட்காததையும் தாய் உள்ளத்தோடு மக்களுக்கு செய்ய பல திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தி வருகிறார்.  மின்சார பிரச்சனைக்கு முக்கிய காரணமே தி.மு.க. தான் இந்தோனேசியாவில் இருந்து தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்துதான். சரியா நிர்வாகம் செய்யாதது இன்றைக்கு மின் தட்டுப்பாட்டை அனுபவிக்கிறோம். மீனவர் பிரச்சினையை போக்க வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் மீனவர் நலன் காக்கப்படும். என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் இது உறுதி என்று பேசினார்.

விழாவில் மருதுபாண்டியன், நூர்முகம்மது முகம்மதுயூசுப், சந்திரன்,  செந்தில்வேல், காந்தி சுப்பிரமணியன், ஞானம், களஞ்சியராஜா, நாகராஜன் நம்புவேல், முருகவேல் மற்றும்  அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்