முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிக் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 30 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், மே. 30 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் வெற்றி பெற்று 2 - வது சுற்றுக்கு முன்னேறினார். ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிரா  ண்ட் ஸ்லாம் போட்டிகள் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் நடைபெற்று வரு கின்றன. 

இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்ன் நகரில் கடந்த ஜனவரி மாதம் வெகு விமர்சையாக நடந்த து. இதன் ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிக்கும் (செர்பியா), மகளிர் பிரிவில் அசரென்காவும் (ரஷ்யா) பட்டம் வென்றனர். 

இந்த ஆண்டிற்கான 2- வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டி

ன் தலைநகரான பாரிசில் கடந்த 27 -ம் தேதி துவங்கியது. 

இதன் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவி ன் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்த து. இதில் உலகின் முதல் நிலை வீரரு ம், 5 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிக்கும், இத்தாலி வீரர் போடி டோவும் மோதினர். 

4 செட்கள் வரை நீடித்த இந்த ஆட்டத்தி ல் ஜோகோவிக் சிறப்பாக ஆடி, 7 - 6 6- 3, 6 - 1 , 6 - 3, என்ற கணக்கில் இத்தாலி வீரர் டோவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவி க் முதல் முறையாக பிரெ ஞ்சு ஓபன் பட்டத்தை வெல்லும் ஆவலில் உள்ளார். 

மற்ற ஆட்டங்களில் 11 -ம் நிலை வீரர் சைமன் (பிரான்ஸ்), 7 -ம் நிலை வீரர் பெர்டிச் ( செக். குடியரசு) ஆகியோர் வெ ற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறி னர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் போலந்து முன்னணி வீராங்கனையான ரட்வான்ஸ்காவும், செர்பிய வீராங்கனை போஜ்னாவும் மோதினர். 

இதில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான ரட்வான்ஸ்கா அபாரமாக ஆடி, 6- 1, 6- 0 என்ற நேர் செட் கணக்கில் செ ர்பிய வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். 

போலந்து வீராங்கனையான ரட்வான் ஸ்கா அடுத்து நடக்க இருக்கும் 2-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்சை சந்திக்க இருக்கிறார். எனவே இந்தப் போட்டி கடும் சவா லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. 

மற்ற ஆட்டங்களில் சுலோவேக்கியா வீராங்கனை டொனிக்கா, பிரான்ஸ் வீராங்கனை பட்ரோலி, பிரான்ஸ் வீராங்கனை ஜெலீனா ஜான்கோவிக் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்று க்கு தகுதி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்