முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

வியாழக்கிழமை, 31 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், மே. 31 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம் ஸ் பிரான்ஸ் வீராங்கனை ரஜானோவி டம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். செரீனா வில்லியம்சின் டென்னிஸ் வாழ்க்கையில் கிராண்ட் ஸ்லாம் போ  ட்டியைப் பொறுத்தவரை இது ஒரு மோசமான தோல்வியாகக் கருதப்படு கிறது. செரீனாவை தோற்கடித்த ரஜா னோ 111 - ம் நிலை வீராங்கனையா வார். 

இந்த வருடத்தின் 2 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநக ரான பாரிசில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்த ப் போட்டி காலிறுதியை நோக்கி முன் னேறி வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர் கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும், பிரான்ஸ் வீராங்கனை விர்ஜினி ரஜானோவும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்ட த்தில் பிரான்ஸ் வீராங்கனை அபார மாக ஆடி 4 - 6, 7 - 6(7), 6- 3 என்ற செட் கணக்கில் செரீனாவை அதிர்ச்சி தோல் வி அடைய வைத்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 

30 வயதான செரீனா இதுவரை 47 கிரா  ண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கு கொண்டு இருக்கிறார். ஆனால் கிராண் ட் ஸ்லாம் போட்டியின் முதல் சுற்றி லேயே தோற்று அவர் வெளியேறுவது இதுவே முதன் முறையாகும். 

இதற்கு முன்பு கடந்த 1998 - ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இரண்டா வது சுற்றில் அவரது சகோதரி வீனஸி டம் தோற்றார். அதன் பிறகு இந்தத் தோல்வி மோசமான தோல்வியாகும். 

இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்கு முன் பாக செரீனாவின் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் முதல் சுற்று வெற்றி தோல்வி சாதனை 46- 0 என்ற கணக்கில் இருந்தது. 2012 -ம் ஆண்டு வரை களிம ண் தரையில் அவரது சாதனை 17 - 0 ஆக இருந்தது. தவிர, மேட்ரிட் மற்றும் சார்ல்ஸ்டன் ஆகிய பட்டங்களையும் பெற்று இருந்தார். 

2002-ம் ஆண்டு இங்கு பட்டம் வென்ற செரீனா இந்த ஆண்டு பட்டம் வெல் லும் வீராங்கனைகளில் ஒருவராகக் கணிக்கப்பட்டு இருந்தார். ஆனால் துர திர்ஷ்டமாக முதல் சுற்றிலேயே வெளி யேறிவிட்டார். 

இந்தப் போட்டியில் எதிர்பாராத வெற் றி பெற்ற பிரான்ஸ் வீராங்கனை ரஜா னோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். இந்தப் போட்டி சுமார் 3 மணி நேரம் நீடித்தது. 

மேலும், இந்த ஆட்டத்தில் நான் வெற் றி பெற நீங்கள் தான் (ரசிகர்கள்) எனக் கு சக்தியை அளித்தீர்கள். உங்களுக்கு எனது நன்றி. எனக்கு தற்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது என்று ரஜா னோ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்