முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடக்குப்பகுதி தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல

வியாழக்கிழமை, 31 மே 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மே.31 - இலங்கையில் வடக்குப் பகுதி என்பது தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமான பகுதி அல்ல என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். பி.பி.சி. ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் இது பற்றி கூறியுள்ளதாவது: இறுதிப் போருக்கு முன்பாக வடக்கில் அதிகாரிகள் அனைவரும் சிங்களவர்களாகதான் இருந்தார்கள். அதிகளவான தமிழ் அதிகாரிகள் தெற்கு மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர். சிங்களவர்களும் முஸ்லிம்களும் வடக்கில் பணியாற்ற முடியும். ஏனெனில் அது இலங்கையின் ஒரு பகுதிதான்.

இலங்கையின் இறுதிக்கட்ட போர் நடந்த வடக்கு பிரதேசம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமான இடம் இல்லை. வடக்கு பிரதேசம் அங்கு வாழும் தமிழர்களுக்கே உரித்தான ஒரு பகுதி என்று ஏன் இருக்க வேண்டும்? நீங்கள் இலங்கையர் என்றால் நாட்டின் எந்த இடத்திற்கும் சென்று சொத்துக்களை வாங்க முடியும். நாட்டின் எந்த இடத்திலும் வாழக்கூடிய சுதந்திரம் இலங்கையருக்கு இருக்க வேண்டும். இறுதிக் கட்டப் போரில் மொத்தம் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 7,400 தான். இதில் பெரும்பாலானோர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே. சிறிதளவுதான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போர்க் குற்றங்கள் நிகழ்ந்திருந்தால் நிச்சயம் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் உரிய ஆதாரங்கள் அதற்குத் தேவை என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்