முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முபாரக்கை தூக்கிலிட வலியுறுத்தி எகிப்தில் மீண்டும் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

கெய்ரோ, ஜூன். - 5 - எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. எகிப்தில் மக்கள் புரட்சியால் கடந்த ஆண்டு ஆட்சியை இழந்தவர் முபாரக். புரட்சியின் போது ராணுவத்தை ஏவி விட்டு 850 பேரை கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது எதிர்ப்பாளர்கள் இந்த தண்டனையால் திருப்தியடையவில்லை. முபாரக்கிற்கு எதிரான புரட்சியின் போது மக்கள் பெருமளவில் கூடி போராடிய கெய்ரோவில் உள்ள தெஹ்ரி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடி முபாரக்கிற்கு தண்டனை வழங்க வேண்டும் என போராடி வருகின்றனர். இதே போல் நாடு முழுவதும் ஏராளமானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வன்முறை மோதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் முபாரக்கின் மகன்கள் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எகிப்தில் 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர் முபாரக். கடந்த ஆண்டு மக்கள் புரட்சி வெடித்து ஆட்சியை இழந்த அவர், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், வேலையின்மை, உணவு பொருட்களின் விலை உயர்வு, தேர்தல்களில் முறைகேடு போன்ற காரணங்களால் முபாரக் மீது எகிப்து மக்கள் வெறுப்படைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்