முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியது பாகிஸ்தான்

புதன்கிழமை, 6 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஜூன்.- 6 - ஏற்கனவே சமீபத்தில் இரண்டு முறை அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்திய பாகிஸ்தான் நேற்று 3 வதாக மேலும் ஒரு அணு ஆயுத ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அந்நாட்டு ராணுவம்  தெரிவித்துள்ளது. இந்தியா கண்டம் விட்டு  கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்த பிறகு  பாகிஸ்தான் ஏற்கனவே 4 அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. அதன்படி பார்க்கும் போது  நேற்று நடத்திய சோதனை 5 வது  சோதனையாகும். ஹடாப் - 7 என்ற இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்தி சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது என்று பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை எதிரிக்கு தெரியாமல் ஊடுருவி சென்று தாக்கும் திறன் கொண்டது. இதில்  அணு ஆயுதங்கள் மற்றும் மரபுசார் ஆயுதங்கள் இரண்டையும் பயன்படுத்தலாம். இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாகிஸ்தான் விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டு  ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும், பிரதமர் யூசுப் ரஜா கிலானியும்  பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்