முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்பாட்சா தற்கொலை வழக்கு: சி.பி.ஐ.யிடம் விளக்கம் கேட்கிறது கோர்ட்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச். - 31 - தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ராசாவின் கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்த வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய புலனாய்வு துறையிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டது. இது தொடர்பாக பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன் தாக்கல் செய்த பொது நல மனுவில், சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கு இன்னமும் தமிழ்நாடு போலீசாரின் விசாரணையில்தான் உள்ளது. அது சி.பி.ஐ. க்கு மாற்றப்பட்டவில்லை. அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இது தொடர்பாக சி.பி.ஐ.யிடம் விளக்கம் கேட்டுள்ளது. உச்சநீதிமன்ற விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சி.பி.ஐ.யின் மூத்த வழக்கறிஞர் வேணுகோபாலின்பார்வைக்கு அனுப்பி வைப்பதாகவும் இந்த வழக்கை மீண்டும் வரும் 1 ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்