முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கை அமெரிக்க கருத்துக்கு பாக்.கோபம்

சனிக்கிழமை, 9 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஜூன்.- 9 - தீவிரவாதிகளை ஒடுக்க எடுத்து வரும் நடவடிக்கையில் அமெரிக்கா குறை கூறியிருப்பது ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் உறவை மேலும் மோசமாக்கும் என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷெரி ரகுமான் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுவது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டா சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லியோனின் இந்த கருத்து அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் மோசமான உறவை மேலும் மோசமாக்கும் என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷெரி ரகுமான் கடுமையாக கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானையொட்டி பாகிஸ்தான் பகுதி தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக இருக்கிறது என்றும் இந்த விஷயத்தில் அமெரிக்கா பொறுமையை இழக்க வேண்டியுள்ளது என்றும் பொறுப்பு வாய்ந்தவரான ராணுவ அமைச்சர் லியோன் கூறியிருப்பதை பாகிஸ்தான் கடுமையாக கருதுகிறது என்றார். மேலும் இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சென்ற லியோன், பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் அரசு மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பது பாகிஸ்தான் அரசை மேலும் கோபமடையச் சொய்துள்ளது என்றும் ஷெரி ரகுமான் மேலும் கூறினார். பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துமேயானால் அது பாகிஸ்தானின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்றும் அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்