முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிபந்தனை

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜூன். 16 - அமெரிக்கா கூறுவதை செயல்படுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டா நிபந்தனை விதித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிய போது, அமெரிக்கா கூறுவதை பாகிஸ்தான் செயல்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் அதற்கு பாகிஸ்தான் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. எனவே நிதியுதவி வழங்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதுள்ளது. பாகிஸ்தானுக்கு 2013 ம் ஆண்டுக்கு ரூ. 350 கோடி டாலர் தொகையை ராணுவம் மற்றம் பொருளாதார மேம்பாட்டுக்கு அளிக்கலாம் என ஒபாமா நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரே இக்கருத்தை வெளியிட்டிருப்பதால் பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைப்பது மேலும் சிக்கலாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்