முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மெக்சிக்கோ - பிரேசில் நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. ஜூன். 17 - மெக்சிக்கோ,பிரேசில் நாடுகளில் ஒரு வார கால சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக  பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார். மெக்சிக்கோவில் இம்மாதம் 18 மற்றும் 19 தேதிகளில்  ஜி. 20 அமைப்பு நாடுகளின் 7 வது உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதே போல பிரேசில் நாட்டில் ரியோ -20 உச்சி மாநாடு வருகிற 20,21, 22 தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்த இரு மாநாடுகளிலும்  இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மெக்சிக்கோ புறப்பட்டு சென்றார். மெக்சிக்கோ பயணத்தை முடித்துக்கொண்டு  பின்னர் அவர் 20 ம் தேதி பிரேசில் புறப்பட்டு செல்வார்.

முன்னதாக அவர் பிராங்க்பர்ட் நகரில் சிறிது நேரம் தங்கி செல்வார்.  அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு இந்தியா திரும்பும் போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிடோரியா நகரில் சிறிது நேரம் தங்குவார்.

ஐரோப்பிய நாடுகளில் கடன் சுமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து  மெக்சிக்கோ மற்றும் பிரேசில் நாடுகளில் நடக்கும் மாநாடுகளில் விவாதிக்கப்பட உள்ளன.

தற்போது இந்திய ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டு விட்டதால்  அவர் இந்தியாவின் நோக்கங்களை இம்மாநாடுகளில் தெளிவாக வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்காலிக தீர்வு காண்பது மட்டுமல்லாம் நிரந்தர தீர்வு காண்பது குறித்தும் இந்தியாவின் பொருளாதார  நிலைமைகளை பிரதமர் விளக்குவார்.

பிரதமர் மன்மோகன் சிங் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது ஜெர்மனி, பிரான்ஸ்,  இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா நாடுகளின் தலைவர்களையும்  சந்தித்து பேசுவார்.

மெக்சிகோவில்  லாஸ் கேபோஸ் நகரிலும், பிரேசிலில்  ரியோ நகரிலும்  இந்த இரு மாநாடுகளும் நடைபெற உள்ளன.

தனது வெளி நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் இம்மாதம் 23 ம் தேதி தாயகம் திரும்புவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்