முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக அதிகரிக்கும் - பிரதமர்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

லாஸ்காபோஸ், ஜூன் - 20 - நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதமாக அதிகரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை  தெரிவித்தார். மெக்சிகோவில் உள்ள லாஸ்காபோஸ் நகரில் ஜி -20 அமைப்பின் வளர்ந்த நாடுகள்  மற்றும் வளரும் நாடுகளின் 7 வது உச்சி மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டின் பூர்வாங்க கூட்டத்தில்  பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது குறித்து  கவலை தெரிவித்த மன்மோகன் சிங்,  அதிகமான பொருளாதார வளர்ச்சிக்காகவும்  விரைவான வேலை வாய்ப்பு பெருக்கத்திற்காகவும் நாட்டு மக்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள் என்றார். ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் முதலீட்டாளர்களின் மனநிலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை தனது அரசு எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 2008-ம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடிக்கு பிறகு மற்ற நாடுகளை போல இந்தியாவும் நிதி பற்றாக்குறையை அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் இப்போது இந்த நிதி பற்றாக்குறையை போக்க தேவையான நடவடிக்கைகளை தனது அரசு எடுத்து வருகிறது என்றும்  அவர் குறிப்பிட்டார். பொருளாதார மீட்சியை பெற மானியத்தை  கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதிகமான மானியங்கள், குறைவான வரி வருவாய்  ஆகியவற்றால் கடந்த நிதியாண்டில்  பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நடப்பு நிதியாண்டில் இந்த நிதி  பற்றாக்குறை ஓரளவுக்கு நீங்கும் என்றும்  அவர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி  கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக உள்ளது என்றும்  இது வரும் ஆண்டுகளில்  ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
மற்ற நாடுகளைப்போல இந்தியாவும் பொருளாதார தேக்க நிலையால்  பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதை சரி செய்ய அரசு தேவையான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றும்  அவர் கூறினார்.

 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்