முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் ஜனத்தொகை 121 கோடியாக உயர்ந்தது

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.1 - இந்தியாவின் ஜனத்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் மட்டும் நாட்டின் ஜனத்தொகை 18.1 கோடியாக அதிகரித்துள்ளது என்று 2011-ம் ஆண்டுக்கான தற்காலிக ஜனக்தொகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் ஜனத்தொகை கடந்த 1872-ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி இந்தாண்டு 15​வது நாட்டின் ஜனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டு கட்டமாக 640 மாவட்டங்கள், 5 ஆயிரத்து 924 சப்-மாவட்டங்களில்  ஜனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த விபரத்தை இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில் நாட்டின் ஜனத்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 18 கோடியே 10 பேர் அதிகரித்துள்ளனர் என்றார். அவர் மேலும் கூறுகையில் 121 கோடிப்பேரில் 62 கோடியே 37 லட்சம் பேர் ஆண்கள். 58 கோடியே 65 லட்சம் பேர் பெண்கள். இந்தியாவின் ஜனத்தொகையானது அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள மொத்த ஜனத்தொகைக்கு நிகரானதாகும் என்றும் கமிஷனர் சந்திரமெளலி தெரிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை நாட்டில் 18 கோடியே 10 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். நாட்டின் ஜனத்தொகை வளர்ச்சி 2011-ம் ஆண்டில் 17.64 லட்சமாக உள்ளது. இது கடந்த 2001-ம் ஆண்டில் 21.15 சதவீதமாக இருந்தது. நாட்டிலேயே உத்திரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிக அளவு ஜனத்தொகை உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் மகாராஷ்டிரா மாநிலம் ஜனத்தொகை அளவானது அமெரிக்க மக்களின் ஜனத்தொகையை காட்டிலும் அதிகமாக உள்ளது. தத்ரா,நாகர் ஹவேலி,புதுவை ஆகிய இடங்களில் ஜனத்தொகை வளர்ச்சி அதிக அளவில் உள்ளது. இந்த பகுதியில் ஜனத்தொகை அதிகரிப்பானது 55 சதவீதமாக உள்ளது. நாகலாந்து மாநிலத்தில் ஜனத்தொகை வளர்ச்சி நாட்டிலேயே குறைவாக உள்ளது. டெல்லியிலும் அதனையடுத்து சண்டிகார் நகரிலும் ஜனத்தொகை நெருக்கம் அதிகமாக உள்ளது. அருணாசலப்பிரதேச மலைப்பகுதியில் மக்கள் நெருக்கும் மிகவும் குறைவாக உள்ளது. நாட்டில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்