முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய நிதி நெருக்கடி குறித்து ஒபாமா ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன். ஜூன். 27 - ஐரோப்பிய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இத்தாலிய பிரதமர் மரியோ மோன்டியுடன்  அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா முக்கிய ஆலோசனை நடத்தினார். பிரான்ஸ் , இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய யூனியனை  சேர்ந்த நாடுகளில்  கடுமையான பொருளாதார மற்றும்  நிதி  நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட கடன் நெஏருக்கடி காரணமாகவே இந்த நிலை ஏற்ப்டடுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி  குறித்து சமீபத்தில் மெக்சிகோவில் உள்ள லாஸ் காபோஸ் நகரில் நடந்த ஜி. 20 நாடுகளின் 7 வது உச்சி மாநாட்டில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நிதியத்தின் உதவியை நாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இத்தாலிய பிரதமர்  மரியோ மோன்டி அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இவர் நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை சந்தித்து பேசினார்.அப்போத ஐரோப்பிய  நாடுகளில்  தற்போதுள்ள பொருளாதார மற்றும் நிதி நிலவரங்கள் குறித்து இருவரும் விவாததித்தனர். இந்த தகவலை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago