முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் உயர்வு

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா. ஏப்ரல்.1 - பீகார் எம்.எல்.ஏ.க்களுக்கு  சம்பளத்தை  பீகார் அரசு 3 மடங்கு  அதிகரித்துள்ளத .இதே போல இவர்களுக்கான அலவன்சுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. பீகார் மாநில எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து  இது குறித்து முதல்வர் நிதீஷ் குமார் தலைஐயிலான அமைச்சரவை ஆலோசனை செய்தது. 

அதன்படி எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 3 மடங்காக அதிகரிப்பது என்றும் அலவன்ஸ் தொகைகளையும்  அதிகரிப்பத என்றும்  முடிவு  செய்யப்பட்டது.

இந்த சம்பளம் மற்றும் அலவன்ஸ் உயர்வு மூலம் பீகார் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.34 கோடி கூடுதலாக செலவாகும்.

இந்த தகவலை அமைச்சரவை மற்றும் ஒத்துழைப்பு துறை முதன்மை  செயலாளர் ரவிகாந்த் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

இந்த ஊதிய  உயர்வுகள் ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமுலுக்கு வருகின்றன என்றும் அவர் சொன்னார்.

பீகார்  சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களின்  சம்பளம் மாதத்திற்கு  ரூ. 8,000 ஆக உள்ளது. இது இப்போது ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது மாதம் ரூ. 12,000 ஆக  வழங்கப்படும்  தொகுதிப்படி ( அலவன்ஸ் 0 இனி மாதம் ரூ. 25,000 ஆக வழங்கப்படும் என்றும் அவர்  கூறினார்.

ஸ்டேசனரி செவுக்காக மாதந்தோறும்  ரூ. 2,000 வழங்கப்பட்டு வந்தது. இது இனி மாதம் ரூ. 8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்