முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க விமானத்தை தகர்க்க அல்கொய்தா தீவிரவாதிகள் சதி

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

லண்டன்,ஜூலை.- 2 - ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின்போது அமெரிக்க விமானத்தை குண்டுவெடித்து தகர்க்க அல்கொய்தா தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகி உள்ளது.  லண்டனில் ஒலிப்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் விமானம் மூலம் லண்டன் வருவார்கள். அப்போது அமெரிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமானம் மூலம் லண்டனுக்கு வருவார்கள். அமெரிக்க விமானம் வரும்போது அதை குண்டுவெடித்த தகர்க்க அல்கொய்தா தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக நார்வே நாட்டை சேர்ந்த ஒருவருக்கு பயிற்சியையும் அல்கொய்தா தீவிரவாதிகள் கொடுத்துள்ளனர். நார்வே நாட்டு இளைஞர் ஒருவர் முஸ்லீமாக மாறி இந்த செயலலில் ஈடுபட பயிற்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. அப்போது ஏதாவது ஒரு நாளில் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றவும் அல்கொய்தா தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளனர் என்று பத்திரிகைகளிலும் தொலைகாட்சிகளிலும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த சதித்திட்டத்தை சேர்த்து அல்கொய்த தீவிரவாதிகள் தீட்டிய 4 சதித்திட்டங்கள் அம்பலமாகி உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஒரு நைஜீரிய நாட்டை சேர்ந்த பிரிட்டீஷ் மாணவன் மூலம் விமானத்தில் குண்டுவெடிக்க அல்கொய்தா தீவிரவாதிகள் சதி செய்தனர். ஆனால் இந்த குண்டுவெடிக்காமல் போய்விட்டதால் நாசவேலையில் இருந்து விமானம் தப்பியது. அதனையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு சிகாகோவிற்கு சென்ற விமானத்தில் 2 வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் பதுக்கிவைத்தனர். அவைகள் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு செயலக்கப்பட்டதால் நாசவேலை தவிர்க்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லண்டனில் ஊடுருவிய தீவிரவாதி ஒருவை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் அமெரிக்க அதிகாரிகளை கொல்ல 2 குண்டுகளை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. லண்டனில் ஒலிம்பிக் போட்டி வரும் 27-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்