முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலுமிகளை விடுவிக்க உதவுமாறு கிருஷ்ணா வேண்டுகோள்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.6 - சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடத்தி சென்று பிணைக்கைதிகளாக வைத்துள்ள இந்திய மாலுமிகள் 6 பேர்களை விடுவிக்க உதவுமாறு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக்கொண்டுள்ளார்.  அரபு கடலில் கப்பலில் சென்று கொண்டியிருந்த இந்திய மாலுமிகள் 6 பேர்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சோமாலியா நாட்டு கடல் கொள்ளையர்கள் கடத்திச்சென்று பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க இந்திய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் ஐக்கிய அரபு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜையத் அல்-நயனுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய மாலுமிகள் 6 பேர்களை உடனடியாக விடுதலை செய்ய உதவுமாறு கோரியுள்ளார். இந்தநிலையில் சோமாலியா நாட்டு கடத்தல்காரர்களுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளது என்றும் விரைவில் நல்ல முடிவு ஏற்படலாம் என்றும் துபாயில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாலுமிகளை சோமாலியா கடல் கொள்ளையர்கள் பிடித்து பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். அவர்களில் 62 பேர் இறந்துவிட்டனர். இந்தாண்டு முதல் 3 மாதங்களில் மட்டும் சோமாலியா நாட்டு கடல் கொள்ளையர்கள் 43 கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்