முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பழிப்பு வழக்கில் கைதான தடகள பிங்கிக்கு ஜாமீன்

புதன்கிழமை, 11 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை. 11 - கற்பழிப்பு வழக்கில் கைதாகி சிறையி ல் அடைக்கப்பட்ட  தடகள வீராங்க னை பிங்கி பிராமனிக்கிற்கு 25 நாட்க ளுக்குப் பிறகு, கொல்கத்தா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு - 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற வீரா ங்கனை பிங்கி பிராமனிக். இவர் ஆண் என்றும், தன்னை கற்பழித்து விட்டார் என்று 30 வயது பெண் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் பிங் கி மீது வழக்குப் பதிவு செய்து சிறையி ல் அடைத்தனர். இது தொடர்பான வழ க்கு நிலுவையில் உள்ளது. 

இதற்கிடையே பிங்கி ஆணா பெண்ணா என்ற சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 25 நாள் சிறை வாசத்திற்குப் பின்பு பிங்கிக்கு கொல்க த்தாவில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட நீதிமன்றம் இந்த ஜாமீன் உத் தரவை அளித்துள்ளது. 

பிங்கி ஆணா அல்லது பெண்ணா என் பது தொடர்பான சோதனை நடத்தப்ப ட்டது. இந்த அறிக்கை நேற்று எஸ். எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு அனு ப்பி வைக்கப்பட்டது. 

கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி பிங்கி யுடன் வசித்து வந்த 30 வயதான பெண் ஒருவர் தன்னை பிங்கி கற்பழித்து விட்டதாக அளித்த புகாரின் பேரில் பிங்கி கைது செய்யப்பட்டார். 

இதற்கிடையே கடந்த மாதம் 6 -ம் தேதி கொல்கத்தா நீதிமன்றத்தில் பிங்கி மீது   பொது நலன் வழக்கு ஒன்று பதிவு செ ய்யப்பட்டது. இதில் பிங்கி சித்திரவ தை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. 

எனவே பிங்கி மீதான வழக்கு விசார ணை தொடர்பான ஆவணங்களை 2 வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மேற்கு வங்க அரசிற்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தவிர, மேற்கு வங்க மனித உரிமை கமிஷனும் பிங்கி விஷயத்தில் தலையிட்ட து. பிங்கி தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உள்துறை, சுகாதாரம் மற்றும் போலீ ஸ் துறைகளை அது கேட்டுக் கொண்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்