முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது கிரிக்கெட் டெஸ்ட்: பாகிஸ்தான் 114 ரன் முன்னிலை

வியாழக்கிழமை, 12 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

பல்லேகல்லே, ஜூலை. 12 - இலங்கை அணிக்கு எதிராக நடந்து வரும் 3 -வது மற்றும் கடைசி கிரிக்கெ ட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 2 -வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்னை எடுத்து உள்ளது. பாகிஸ்தான் அணி தற்போது 114 ரன் முன்னிலையில் உள்ளது. அந்த அணி கைவசம் இன்னும் 6 விக்கெட் உள்ளது. இன்று போட்டியின் கடைசி நாளாகு ம். எனவே இந்தப் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது. 

பாகிஸ்தான் அணியின் 2- வது இன்னி ங்சில் அசார் அலி சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகு ம். தவிர, துவக் க வீரர் மொகமது ஹபீஸ் அரை சதம் அடித்தார். 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லேகல் லேவில் உள்ள சர்வதேச அரங்கத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரு கிறது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன் னிங்சில், 72.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 226 ரன்னை எடுத் தது. 

ஆசாத் சபீக் 158 பந்தில் 75 ரன்னை எடு த்தார். கேப்டன் மிஸ்பா 95 பந்தில் 40 ரன் எடுத்தார். தவிர, டெளபீக் உமர் 29 ரன்னையும், மொகமது ஹபீஸ் 22 ரன் னையும், அட்னன் அக்மல் 24 ரன்னையும், மொகமது சமி 18 ரன்னையும் எடு த்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இலங் கை அணி 100.2 ஓவரில் அனைத்து விக் கெட்டையும் இழந்து 337 ரன்னை எடுத் தது. அந்த அணி சார்பில் 3 வீரர்கள் அரை சதம் அடித்தனர். 

துவக்க வீரர் பரணவிதானா 188 பந்தில் 75 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். சமரவீரா 160 பந்தில் 73 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். பெரீரா 86 பந்தில் 75 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அட க்கம். தவிர, குலசேகரா 33 ரன்னையும், கீப்பர் ஜெயவர்த்தனே 20 ரன்னையும், எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில், ஜூனைத் கான் 70 ரன்னைக் கொடுத்து 5 விக்கெ ட் எடுத்தார். சயீத் அஜ்மல் 66 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, உமர் குல் மற்றும் மொகமது சமி இரு வரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின்பு 2 -வது இன்னிங்சை ஆடிய பாகி ஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 73.6 ஓவரில் 4 விக்கெட் இழப் பிற்கு 225 ரன்னை எடுத்து இருந்தது. 

பாகிஸ்தானின் இன்னிங்சில் அசார் அலி அதிகபட்சமாக, 215 பந்தில் 102 ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 9 பவுண்டரி அடக்க ம். மொகமது ஹபீஸ் 100 பந்தில் 52 ரன் னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி அட க்கம். ஆசாத் சபீக் 26 ரன்னுடன் களத்தி ல் இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago