முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான போட்டி: இங்கிலாந்து வெற்றி

வியாழக்கிழமை, 12 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

மான்செஸ்டர், ஜூலை. 12 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடை பெற்ற 5 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக் கெட் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் முறைப்படி) வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இடைஇடையே மழை பெய்ததால் இரு அணிகளுக்கு மான மொத்த ஓவர்கள் குறைக்கப்பட்டது. இறுதியில் டக்வொர்த் லீவிஸ் முறை அமல்படுத்தப்பட்டது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் குக் மற்றும்  பொபாரா இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபலமாக டிராட் மற்றும் மார்கன் இருவரும் ஆடி னர். 

முன்னதாக பெளலிங்கின் போது, பொபாரா மற்றும் டிரட்வெல் இருவரும் நன்கு பந்து வீசி தலா 2 விக்கெட் எடுத் தனர். அவர்களுக்கு ஆதரவாக ஆண்டர் சன் மற்றும் பின் இருவரும் பந்து வீசினர். 

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கே ல் கிளார்க் தலைமையில் இங்கிலாந்தி ல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப் டன் அலிஸ்டார் குக் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் 5- வது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்தி ரேலிய அணி 32 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், ஒரு வீரர்  கூட அரை சத த்தை தாண்டவில்லை. ஆனால் 2 வீரர் கள் கால் சதம் அடித்தனர் . 

ஜி. பெய்லி அதிகபட்சமாக, 41 பந்தில் 46 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்ட ரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். துவக்க வீர ர் வார்னர் 32 பந்தில் 32 ரன்னை எடுத் தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ச ர் அடக்கம். தவிர, ஸ்மித் 21 ரன்னையு ம், வாடே 12 ரன்னையும், பட்டின்சன் 13 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், பொபா ரா 8 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். டிரட்வெல் 23 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஆண்டர்சன் மற்றும் பின் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி 29 ஓவரில் 138 ரன் னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்பு களம் இறங்கிய அந்த அணி 27.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்னை எடு த்தது. 

இதனால் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரை 4 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி யது. 

இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் அலிஸ்டார் குக் 78 பந்தில் 58 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். பொபாரா 55 பந்தில் 52 ரன்னை எடுத் தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவி ர, டிராட் 10 ரன்னையும், மார்கன் 9 ரன் னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், ஹில்பெ ன்ஹாஸ் 19 ரன்னைக் கொடுத்து 1 விக் கெட் எடுத்தார். மெக்கே 27 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, கிளார்க் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பொ பாராவும், தொடர் நாயகனாக இயான் பெல்லும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago