முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகரும் - புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தாராசிங் உடல் தகனம்

வியாழக்கிழமை, 12 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

 

மும்பை,ஜூலை.13 - புகழ் பெற்ற மல்யுத்த வீரரும் நடிகருமான தாராசிங் நேற்று மரணமடைந்தார். அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 1928-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி பஞ்சாபில் உள்ள தரம்சக் என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் உயரமாகவும் உடல் பலமாக இருந்ததால் மல்யுத்த விளையாட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார். உலக அளவில் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்களான கிங்காங் (ஆஸ்திரேலியா) ஜார்ஜ் (கனடா) ஜான் டெசில்வா (நியூசிலாந்து) ஆகியோர்களுக்கு இணையாக தாராசிங் விளங்கினார். நூற்றுக்கணக்கான மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர். மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர் திரையுலகத்திலும் புகுந்தார். பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். சங்டில், வதன் சீ டூர், ரஷ்டம்-இ-பாக்தாத், ஷேர்தில்,சிக்கந்தர் ஜி அஜம், ராகா, மேரா நாம் ஜோக்கர்,தரம்கரம் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினியுடன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். கடந்த 1983-ம் ஆண்டோடு மல்யுத்த போட்டியில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டார். 

அரசியலிலும் தாராசிங் ஈடுபட்டார். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த தாராசிங் கடந்த 2003-ம் ஆண்டு ராஜ்யசபை எம்.பி.யானார். அதேசமயத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படிப்படியாக ஓய்வெடுக்கத்தொடங்கினார். நேற்றுமுன்தினம் காலையில் அவருக்கு திடீர் உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை டாக்டர்கள் சோதித்து பார்த்துவிட்டு வீட்டுக்கு கொண்டு செல்லும்படி கூறிவிட்டனர். அவரது மூளை செயல் இழந்துவிட்டதால் நேற்றுக்காலை சரியாக 7.30 மணிக்கு மரணமடைந்தார். 

மரணமடைந்த தாராசிங் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகத்தினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நேற்று மாலையே உடல் தகனம் செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago