முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய அன்னிய நேரடி கொள்கைக்கு இடது.கம்யூ. கண்டனம்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.2 - மத்திய அரசின் புதிய அன்னிய நேரடி முதலீட்டுக்கொள்கை இந்திய விவசாயத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இடது கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு புதிய கொள்கை ஒன்றை அறிவித்துள்ளது. 

இந்த கொள்கை குறித்து இடது கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்த புதிய கொள்கையால் இந்திய விவசாயம் பெரிதும் பாதிக்கும் என்று இடது கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.

இந்த புதிய கொள்கையால் இந்திய கம்பெனிகள் மீது வெளிநாட்டு கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்துவது மேலும் அதிகரிக்கும் என்று அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய கொள்கையை அமுல்படுத்தக் கூடாது என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த புதிய கொள்கையால் இந்திய விவசாயம் மட்டுமல்லாமல் தொழில் அபிவிருத்தியும் பாதிக்கப்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதை ஏற்க முடியாது என்றும் அது அநீதியானது என்றும்  அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்