முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.,கிற்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை

வியாழக்கிழமை, 12 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

பல்லேகல்லே, ஜூலை. 13- பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக ளுக்கு இடையே நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இலங்கை 1- 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில், அசார் அலி, ஆசாத் சபீக், ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர். அவர்களுக்கு பக்கபலமாக, மொகமது ஹபீஸ், அட்னன் அக்மல், கேப்டன் மிஸ்பா உல் ஹக், டெளபீக் உமர் ஆகியோர் ஆடினர். 

பெளலிங்கின் போது, ஜூனைத் கான், சயீத் அஜ்மல், ஆகியோர் நன்கு பந்து வீசி முக்கிய விக்கெட்டை வீழ்த்தினர். அவர்களுக்கு ஆதரவாக, உமர் குல், மொகமது சமி ஆகியோர் பந்து வீசினர். 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பல்லேகல்லே சர்வதேச அரங்கத்தில் கடந்த 8-ம் தேதி துவங்கி 12 ம் தேதி முடிவடைந்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகி ஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 226 ரன்னை எடுத்தது. ஆசாத் சபீக் 75 ரன் னையும், கேப்டன் மிஸ்பா 40 ரன்னையும், டெளபீக் உமர் 29 ரன்னையும், ஹபீஸ் 22 ரன்னையும், அட்னன் அக்ம ல் 24 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு களம் இறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 337 ரன்னை எடுத்த து. அந்த அணி சார்பில், பரணவிதா  னா மற்றும் பெரீரா தலா 75 ரன்னையு ம், சமரவீரா 73 ரன்னையும், குலசேக ரா 33 ரன்னையும், கீப்பர் ஜெயவர்த்த னே 20 ரன்னையும் எடுத்தனர். 

அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய பா கிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 380 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. இதில் அசார் அலி 136 ரன் னையும், ஆசாத் சபீக் 100 ரன்னையும், மொகமது ஹபீஸ் 52 ரன்னையும், அட் னன் அக்மல் 35 ரன்னையும், யூனிஸ் கான் 19 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 270 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங் கிய அந்த அணி 5 -வது நாள் ஆட்ட நே ர முடிவில் 62 ஓவரில் 4 விக்கெட் இழப் பிற்கு 195 ரன்னை எடுத்து இருந்தது. 

இதனால் இந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இலங்கை அணி 1- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இலங்கை அணி தரப்பில், சங்கக்கரா 125 பந்தில் 74 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். சண்டிமால் 127 பந்தில் 65 ரன்னை எடு த்தார். தவிர, பரணவிதானா 22 ரன்னைஎடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஆசாத் சபீக்கும், தொடர் நாயகனாக சங்கக்கராவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago