முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலதரவரிசை டேபிள் டென்னிஸ் சென்னைவீரர்கள் சாம்பியன்பட்டம்

புதன்கிழமை, 18 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

திண்டுக்கல், ஜூலை.- 18 - திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள்  சாம்பியன் பட்டம் வென்றனர். திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியும், மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கமும் இணைந்து கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டிகளை 2 நாட்கள் நடத்தியது. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதிலும் இருந்து 660 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சிறுவர் பிரிவு, சப் ஜூனியர் பிரிவு, ஜூனியர் பிரிவு, சீனியர் பிரிவு, முதுநிலை வீரர்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் சர்வதேச வீரர்களான நித்தின் திருவேங்கடம், சுஷ்மித் ஸ்ரீராம், சிவானந்த சேஷாத்திரி, பிரசன்னா, வித்யா, கிருத்திகா, ஹர்ஷவர்த்தினி, அபிநயா, ரமேஷ் மற்றும் தேசிய வீரர்களான சமானா, அம்ருதா, பஷ்பக், நர்மதா உட்பட சிறந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளின் அனைத்துப் பிரிவுகளிலும் பெரும்பாலாக சென்னை வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவர் இ.என்.பழனிச்சாமி தலைமை வகித்தார். பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் இயக்குனர் ஆர்.எஸ்.கே. லட்சுமண பிரபு முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் செல்வக்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கல்வித்துறையின் இணை செயலாளர் ராம பாண்டுரெங்கன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் கல்லூரியின் சார்பில் கேடயங்களை வழங்கினார். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 16 இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன. முடிவில் திண்டுக்கல் டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் பீட்டர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் விஜய் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்