முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசார யுக்தியை மாற்றிய கிரிக்கெட் மோகம்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,ஏப்.2 - கிரிக்கெட் மோகமானது அரசியல் கட்சி தலைவர்களின் பிரசார யுக்தியை மாற்றிவிட்டது. உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்த போட்டியை நேரடியாக பார்க்க ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் வருகிறார்கள். மேலும் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட் வாங்கினார்கள். டிக்கெட்டுக்கு கிராக்கியாக இருந்ததால் ஒரு சிலர் ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்று ஆவலுடன் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டியிருக்கிறார்கள். குறிப்பாக இந்திய, இலங்கை மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். மொகாலியில் நடைபெற்ற அரை இறுதி போட்டியை பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி மற்றும் பெரும் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கண்டுகளித்தனர். அதேமாதிரி இறுதிபோட்டியையும் காண மக்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகளும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால் இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக அன்றைய தினம் செல்லவிருந்தவர்கள் அன்றைய தின பிரசாரத்தை வேறு தேதிக்கு மாற்றியுள்ளனர். அரசியல் வாதிகள் இன்று நடைபெற இருந்த பிரசார கூட்டத்தை ரத்து செய்ததோடு, வீதி வீதியாக பிரசாரம் செய்வது, யாத்திரை செல்வது ஆகியவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களுடைய வீடுகளில் அமர்ந்து குடும்பத்தார்களுடன் கிரிக்கெட் போட்டியை பார்ப்பார்கள். மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு மக்களுடன் சேர்ந்து எங்கள் கட்சிக்காரர்கள் கிரிக்கெட் விளைாயாட்டை பார்த்து அவர்களின் உணர்வோடு ஒன்றி வாக்கு சேகரிப்பார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுல்தான் அகமத் நேற்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மேலும் தங்களுடைய கட்சி தேர்தலில் வெற்றிபெற்றால் விளையாட்டு துறை வளர்ச்சிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்