முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி - 20 உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு இடம்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை. - 19  - இலங்கையில் நடைபெற இருக்கும் டி -20 உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணியில் அதிரடி வீரரான யுவராஜ் சிங் இடம் பெற்று இருக்கிறார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரான சஞ்சய் ஜக்டேல் இந்த பட்டியலை வெளியிட்டார். பயிற்சிக்குப் பின்பு இதில் இருந்து இறுதிக் கட்டமாக 15 வீரர்கள் கொண்ட குழு தேர்வு செய்யப்படும். டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடக்கிறது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. டி - 20 உலகக் கோப்பையில் 10 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்காக ஒவ்வொரு நாட்டு வாரியங்களும் உத்தேச அணியை அறிவித்து வருகின்றன. இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிட்சை எடுத்துக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் அவர் நாடு திரும்பினார். இடையே அளித்த பேட்டியில் டி - 20 உலகக் கோப்பையில் பங்கு கொள்ள விருப்பம் தெரிவித்தார். இருந்த போதிலும், டி - 20 உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் யுவராஜ் இடம் பெறுவாரா என்ற கேள்விக் குறி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இலங்கையில் நடக்க இருக்கும் உலகக் கோப்பைக்காக 30 பேர் கொண்ட உத்தேச அணியை நேற்று அறிவித்தது.
இதில் இடது கை அதிரடி வீரரான யுவ ாஜ் சிங் இடம் பெற்று இருக்கிறார். தவிர, திறமை வாய்ந்த இளம் வீரர்களான ரகானே, மந்தீப் சிங், நாமன் ஓஜா, அம்பாதி ராயுடு ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.  மேலும், 32 வயதான ஹர்பஜன் சிங் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேசிய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.  அவர் இடையே பார்மை இழந்ததைத் தொடர்ந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அம்பாதி ராயுடு, மந்தீப் சிங் மற்றும் நாமன் ஓஜா ஆகியோர் ஐ.பி.எல். தொடரில் நன்கு ஆடியதைத் தொடர்ந்து அணியில் இடம் பெற்று உள்ளனர்.
தமிழக வேகப் பந்து வீச்சாளரான பாலாஜியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம் பெற்று உள்ளார். பாலாஜி கடைசியாக கடந்த 2009 -ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஆடினார்.
யுவராஜ் சிங் அமெரிக்காவில் புற்று நோய்க்காக கீமோதெரபி சிகிட்சை எடுத்துக் கொண்ட பிறகு பெங்களுரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்து வந்தார்.
கடந்த 2007 - ம் ஆண்டு நடந்த டி - 20 உலகக் கோப்பை போட்டியில் யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 6 சிக்சர் அடித்தது நீங்காத நினைவுகளாகும். இந்திய ஏ அணிக்கும், மே.இ.தீவு ஏ அணிக்கும் இடையே சமீபத்தில் ஒரு நாள் தொடர் நடந்தது. இதில் ஷிகார் தவான் சிறப்பாக ஆடியதைத் தொடர்ந்து இந்த உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கிறார்.
மந்தீப் சிங் ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடினா
ர். இதில் அவரது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டும் சிறப்பாக இருந்தது.
அதே போல அதிரடி வீரரான அம்பாதி ராயுடுவும் உத்தேச அணியில் இடம் பெற்று உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் அட்டகாசமாக ஆடியதைத் தொடர்ந்து அவருக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது .
30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி :- மகேந்திர சிங் தோனி, வீரேந்தர் சேவாக், கெளதம் காம்பீர், விராட் கோக்லி, ரோகித்சர்மா, சுரேஷ் ரெய்னா, அஸ்வின்,  பிரக்ஞான் ஓஜா, உமேஷ் யாதவ், அசோக் திண்டா, அஜிங்கியா ரகானே, மனோஜ் திவாரி, ராகுல் சர்மா, வினய் குமார், ஜாஹிர்
கான், யுவராஜ் சிங், ராபின்  உத்தப்பா, மந்தீப் சிங், பையூஸ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா, ஷிகார் தவான், அம்பாதி ராயுடு, ஹர்பஜன் சிங், முனாப் படேல், நமன் ஓஜா, திணேஷ் கார்த்திக், பிரவீன் குமார், மற்றும் எல். பாலாஜி ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்