முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி. ஐ. சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு வேண்டுகோள்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா

 

புதுடெல்லி. பிப். 21-லஞ்ச ஊழல்  வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றங்களை  விரைவில் அமைத்து அவற்றை இயங்க செய்ய வேண்டும் என்று எல்லா மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

பல்வேறு முக்கிய குற்றங்கள் குறித்த, குறிப்பாக ஊழல் வழக்குகள் குறித்த விசாரணைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தெரிகிறது. ஊழல் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த வழக்கு விசாரணைகளை நடத்த ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தேவைப்படுகிறது. இந்த சிறப்பு நீதிமன்றங்களை இதுவரை அமைக்காத மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு இந்த சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு  மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கடிதம் அனுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் 71 சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே  கூறியிருந்த நிலையில் இந்த கடிதத்தை வீரப்ப மொய்லி அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கு மத்திய அரசு நிதி  அளிக்கிறது.  ஆனால் அதற்கான நீதிபதிகளை நியமனம் செய்யும் பொறுப்பு மாநில அரசுகளிடம் விடப்பட்டுள்ளது.

பிரதமர் அறிவித்துள்ள 71 சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றங்களில் இதுவரை 10 நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்