முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 மாதத்திற்குள் மே.வங்கத்தை உயர்த்திக் காட்டுவேன் - மம்தா

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஏப்.3 - ஆட்சிக்கு வந்த மாதத்திற்குள் மேற்கு வங்கத்தை உயர்நிலைக்கு உயர்த்திக் காட்டுவேன் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. கடந்த 35 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் இடதுசாரி கூட்டணி இந்த தேர்தலில் பெரும் தோல்வியை தழுவும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் 6 மாதத்திற்குள் மே.வங்கத்தை உயர்ந்த நிலைக்கு மாற்றிக் காட்டுவேன் என திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:-

எனது அமைச்சரவை மிகவும் சிறியதாக இருக்கும். புதிய அமைச்சகங்களை உருவாக்கி கூட்டணி கட்சியினருக்கு பதவி தரமாட்டேன். ஒரே துறைக்கு 4 அமைச்சர்களையும் நான் அனுமதிக்க மாட்டேன் மேலும் அமைச்சர் பதவி கேட்டு காங்கிரஸ் பிரச்சனை செய்யும் என்று நினைக்கவில்லை. முதல் 6 மாதத்திற்கு கல்வி, மருத்துவம், தொழில் மற்றும் உள்துறை ஆகிய முக்கிய துறைகளை நான் கையில் வைத்துக்கொள்வேன். வேளாண்மை, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துவேன்.மன உறுதி, தன்னம்பிக்கை, மற்றும் நேர்மையான சிந்தனை இருந்தால் ஆக்கபூர்வமான பணிகளை எளிதில் முடிக்கலாம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு மட்டுமே நிலங்கள் கைப்பற்றப்படும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago