முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய தமிழர்கள் மீது தாக்குதல்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,ஏப்.- 4 - இலங்கையில் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய தமிழர்கள் மீது சிங்கள வெறியர்கள் தீவிர தாக்குதல் நடத்தினர். இது இலங்கையில் தொடரும் இன வெறியை காட்டுகிற நிகழ்வாக உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை வென்று கோப்பையைப் பெற்றால் அதனை போரில் இறந்த சிங்கள வீரர்களுக்கு சமர்ப்பிப்போம் என்று ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்திருந்தார். இதனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை அங்கு வாழும் தமிழர்கள் மிகுந்த ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இந்த நிலையில் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர். இதனால் மிகவும் மகிழ்வடைந்த தமிழர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினர். இதனைப் பொறுக்காத சிங்களர்கள் கும்பல் கும்பலாக வந்து தமிழர்களை மிக மோசமாக தாக்கினர். இதில் பல தமிழர்கள் படுகாயமடைந்தார்கள். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனால் போலீசார் குவிக்கப் பட்டனர். 

இதேபோல் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் மற்றும் தமிழர்கஅள் வாழும் பகுதிகளில் தமிழர்கள் இரவு 12 மணி வரை பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்