முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துக்களுக்கு அச்சுறுத்தல்: மூவர்குழுவை அமைத்தார் ஜர்தாரி

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

லாகூர், ஆக. - 13 - பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்நாட்டு அதிபர் ஜர்தாரி மூவர் குழுவை அமைத்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த சிறுபான்மை இந்துக்கள் யாத்திரை என்ற பெயரில் இந்தியாவுக்கு குடிபெயர்வதாக தகவல் வெளியானது. இதனால் சிந்து மாகாண பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 250 இந்துக்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் வாகை எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆவண சரிபார்ப்புக்கு பின் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளில் 115 பேர் அனுமதிக்கப்பட்டனர். எல்லை மூடப்பட்டதால் மற்றவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.  பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் இந்தியாவுக்குள் குடிபெயர்கின்றனர் என்ற தகவலை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில், இந்துக்கள் இந்தியாவில் குடிபெயர்வதற்காக செல்வதாக கூறுவது பாகிஸ்தானின் நற்பெயரை கெடுக்க மேற்கொள்ளப்படும் சதி என்றார்.  சிறுபான்மை இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பிரச்சினையை பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி கவனத்தில் எடுத்து கொண்டுள்ளார். இந்து குடும்பங்களின் குறைகளை களைய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் மவுலா பக்ஸ் சந்தியோ உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அதிபர் ஜர்தாரி அமைத்துள்ளார். சிந்து மாகாண பகுதியில் உள்ள இந்துக்களை சந்தித்து ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதுடன் இந்துக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அதிகாரிகள் தவறி விட்டதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்