முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா, வடஜப்பானில் கடும் நிலநடுக்கம்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஆக. - 16 - கிழக்கு ரஷ்யா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய பகுதிகளில் நேற்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. ரஷியாவின் கிழக்குப் பகுதியில் பூமிக்கு அடியில் 625 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு ஜப்பானிலும் உணரப்பட்டது. இருப்பினும் சுனாமி தொடர்பான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரஷியா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்