முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா: புதிய குடியேற்ற திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக. - 18 - அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய குடியேற்ற திட்டத்தில் முறைகேடாக தங்கியுள்ள ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  இந்த திட்டத்தின் மூலம் சட்டத்துக்கு புறம்பான முறையில் தங்கியுள்ளவர்கள் விண்ணப்பித்து மேலும் 2 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் தொடர்ந்து தங்க முடியும். திறமை வாய்ந்த வெளிநாட்டு இளைஞர்களை முறையான ஆவணம் இல்லாதது என்ற காரணத்தை காட்டி அவர்களது நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு பதிலாகவே இந்த முறை அமல்படுத்தப்பட்டுல்ளது. முறையான ஆவணமில்லாமல் தங்கியுள்ள 17 லட்சம் வெளிநாட்டவர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விண்ணப்பம் செய்பவர்கள் கட்டணமாக சுமார் ரூ. 25 ஆயிரம் செலுத்த வேண்டும். தனித்தனி விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்து ஒப்புதல் அளிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்