முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை போட்டியின் போது என்னை விமர்சித்ததால் ஆவேசமாக ஆடினேன் - கெளதம் காம்பீர் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப். - 6  - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, என்னை விமர்சித் ததால் ஆவேசமாக ஆடி எனது திறனை நிரூபித்தேன் என்று இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான கெளதம் காம்பீர் தெரிவித் தார்.  உலகக் கோப்பை அணியில் ஆடிய கெளதம் காம்பீர் தனது சொந்த ஊரான டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவரு க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். 

அவர்கள் காம்பீரைப் பார்த்ததும் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் காம்பீர் டெல்லி ராஜேந்திர நகரில் உள்ள தனது வீட்டுக்கு செ ன்றார். அங்கும் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்றனர். 

பின்பு நிருபர்களைச் சந்தித்த காம்பீர் உலகக் கோப்பை குறித்த அவர்களது கேள்விக்கு பதில் அளித்தார். அது பற்றிய விபரம் வருமாறு - 2007 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். 

ஆனால் எனக்கு அதில் இடம் கிடைக்கவில்லை. எனக்கு அது ஏமாற்றமாக அமைந்தது. எனவே இந்த உலகக் கோப்பையில் எப்படியும் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 

எனக்கு இடம் கிடைத்தது. வாழ்நாளில் ஒரு தடவை தான் இது போன்ற வாய்ப்பு கிடைக்கும். நான் ஆடிய அணி உலகக் கோப்பையை வெ ன்று இருப்பது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

இறுதி ஆட்டத்தில் நான் எனது வழக்கமான ஆட்டத்தை தான் வெளிப் படுத்தினேன். இக்கட்டான நேரத்தில் இறங்கிய எனக்கு கோக்லி பக்க பலமாக இருந்தார். அதே போல அடுத்து வந்த தோனியும் எனக்கு துணையாக இருந்தார். 

மூவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். சில நேரங்களில் நான் விமர்சனத்துக்கு ஆளானேன். உலகக் கோப்பை யில் சில ஆட்டத்திலும் நான் விமர்சிக்கப்பட்டேன். 

இந்த விமர்சனமே என்னை ஆவேசமாக ஆட வைத்தது. விமர்சனங்க ள் தான் எனக்கு எப்போதுமே உதவியாக இருக்கிறது. ரசிகர்கள் எல் லோருமே நம்மிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். இதை நாம் சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்தியா உலகக் கோப்பையை வென்றதற்கு பயிற்சியாளர் கிர்ஸ்டனு க்கு முக்கிய பங்கு உண்டு. அவர் நல்ல முறையில் அணியை வழிநட  த்தினார். அவர் தான் சிறப்பான அணியை உருவாக்கினார். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago