முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வாதிகாரிகளை அமெரிக்காதான் உருவாக்கியது: ஈரான் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

துபாய்,ஏப்.- 6 - தற்போது எந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பா நாடுகளும் சேர்ந்து போரிட்டு வருகிறதோ அந்த சர்வாதிகளை இந்த அமெரிக்காவும் ஐரோப்பா நாடுகளும்தான் உருவாக்கின என்று ஈரான் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது.

எகிப்து, லிபியா,ஏமன், சிரியா, ஓமன் ஆகிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இதில் எகிப்து நாட்டில் சர்வாதிகாரி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி அதிபர் முபாரக்கை பதவியில் இருந்து இறக்கிவிட்டனர். ஆனால் லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க கடாபியின் ஆதரவு ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். இதை கண்டித்த அமெரிக்காவும், ஐரோப்பா நாடுகளும் சேர்ந்து லிபியா மீது போர் தொடுத்துள்ளன. லிபியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தப்பியோடிவிட்டார். கடாபி மட்டும் தலைமறைவாக இருக்கிறார். அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தையை கடாபியின் மகன்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஏமன், ஓமன், சிரியா நாடுகளில் அதிபர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 

இதுகுறித்து ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. தற்போது எந்த அதிபர்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பா நாடுகளின் படைகளும் போரிடுகிறதோ அந்த அதிபர்களுக்கு முன்பு ஆதரவும் உதவியும் அளித்து அவர்களை அதிபராக நீடிக்க செய்தது அதே அமெரிக்காவும் ஐரோப்பா நாடுகளும்தான் என்று ஈரான் நாட்டு அதிபர் முகமத் அகமதிநெஜத் நேற்று சீன நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களுடைய சட்டை பைகளை நிரப்புவதில்தான் கவனமாக இருக்கின்றன. கடவுளுக்காகக்கூட அவர்கள் யாருக்கும் ஹலோ என்று கூற மாட்டார்கள். அப்படி ஒருவேளை அவர்கள் ஹீ என்று கூறினால் நம்முடைய பாக்கெட்கள் காலியாகி அவர்களின் பாக்கெட் நிறையும் வரைதான் கூறுவார்கள் என்று அதிபர் அகமதிநெஜத் காட்டமாக கூறியுள்ளார். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள அதிபர்களை அமெரிக்காவும் ஐரோப்பா நாடுகளும்தான் சேர்ந்து உருவாக்கின. அந்த நாடுகள் ஆதரவு கொடுக்காத ஒரு அதிபரை கூட நாம் பார்க்க முடியாது. எங்கு புரட்சி ஏற்பட்டாலும் சரி, எங்கு சர்வாதிகாரி ஆட்சி நடந்தாலும் சரி அங்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் ஆதரவு இருக்கும் என்று அதிபர் மஹ்மத் அகமதிநெஜ் கூறியதாக இர்ணா ஏஜன்சி செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மக்கள் ஆதரவாளர்களாக அமெரிக்காவும் ஐரோப்பா நாடுகளும் மாறியுள்ளன. அடுத்த சில மணி நேரங்களில் அந்த நாடுகள் சமாதானத்திற்கு வருவார்கள். அதேநேரத்தில் ஏவுகணை தாக்குதலை நடத்துவார்கள். விமானங்கள் மூலம் குண்டுகளை போடுவார்கள். கடைசியில் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்றும் அதிபர் மஹ்மத் அகமதிநெஜத் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago