முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத ரத்னா விருதுக்கு சச்சின் முழு தகுதியானவர் சென்னையில் தோனி பேட்டி

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 7 - பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தென்டுல்கர் 200 சதவீதம் தகுதியானவர் என தோனி கூறினார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது ஐ.பி.எல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ்  அணியும், 3-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.

4-வது ஐ.பி.எல் 20 ஓவர் போட்டி வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை 50 நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது. இதுவரை நடந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன.

தற்போது நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் கூடுதலாக கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, புனே வாரியர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

ஐ.பி.எல் போட்டியின் தொடக்க ஆட்டம்  நாளை(8ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம்  மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

4-வது ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி,  பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் காமிக்ஸ் புத்தகம், புதிய விற்பனை பொருட்கள், வீரர்கள் அணியும் டி சர்ட்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.

பின்னர் தோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 3 ஐ.பி.எல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக ஆடியது. அணியின் இடம் பெற்ற பெரும்பாலான  வீரர்கள் மீண்டும் இடம் பெற்று உள்ளனர். சிறந்த சுழற்பந்து வீச்சாளரான முரளீதரன் அணியில் இல்லை. அவர் இல்லாதது இப்போது வறுத்தமாக இருக்கிறது.  அவர் சிறந்த ஆலோசகராக இருந்தார்.

சென்னை அணியிலுள்ள 24  வீரர்களும் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். அணி சிறப்பாக உள்ளது. பேட்டிங் வரிசையிலும் பலம் பொருந்தியுளளது.

நான், மைக்ஹசி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், அல்பி மார்க்கெல், பத்ரிநாத் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறோம். எனவே இந்த ஐ.பி.எல் போட்டியிலும் எங்கள் அணி சிறப்பாக ஆடும். தொடக்க வீரர் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஹசி, அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரிநாத் ஆகியோர் தொடக்க வரிசையில் ஆடும் திறமை வாய்ந்தவர்கள்.

பாரத ரத்னா விருதுக்கு தென்டுல்கர் 200 சதவீதம் பொருத்தமானவர். கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். 21 ஆண்டுகளாக விளையாடி அவர் புதிய சகாப்தம் படைத்துள்ளார். தென்டுல்கர் என்னை சிறந்த கேப்டன் என்று பாராட்டி உள்ளார். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு தோனி கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-

எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ரிதிமான் சாகா, ஆர்.அஸ்வின், எஸ்.பத்ரிநாத், ஜொகிந்தர் சர்மா, சுதீப் தியாகி, அபினவ் முகுந்த், அனிருதா ஸ்ரீகாந்த், கணபதி விக்னேஷ், வாசுதேவதாஸ், சதாப் ஜகாதி, யோமகேஷ், ஆல்பி மார்கல், மைக்கேல் ஹசி, ட்வைன் பிராவோ, பொலிங்கர், ஸ்காட் ஸ்டைரிஸ், டிம் செளதி, நுவான் குலசேகரா, சூரஜ் ரந்தீவ், ஜார்ஜ் பெய்லி, பாப் டு பிளசிஸ்.

4-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டம் வருமாறு:-

ஏப்ரல் 8 - கொல்கத்தா நெட் ரைடர்ஸ் - சென்னை - இரவு 8 மணி, 

ஏப்ரல் 13 - கிங்ஸ் லெவன் பஞ்சாய் - மொகாலி - மாலை 4 மணி, 

ஏப்ரல் - 16 - ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை - மாலை 4.00 மணி,

ஏப்ரல் 18 - கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - கொச்சி - இரவு 8.00 மணி, 

ஏப்ரல் 22 - மும்பை இந்தியன்ஸ் - மும்பை - இரவு 8.00 மணி, 

ஏப்ரல் 25 - புனே வாரியர்ஸ் - சென்னை - இரவு 8.00 மணி, 

ஏப்ரல் 27 - புனே வாரியர்ஸ் - நவிமும்பை - மாலை 4.00 மணி, 

மே 1 - டெக்கான் சார்ஜர்ஸ் - சென்னை - இரவு 8.00 மணி, 

மே 4 - ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை - மாலை 4.00 மணி, 

மே 7 - கொல்கத்தா நெட் ரைடர்ஸ் - கொல்கத்தா - மாலை 4.00 மணி, 

மே 9 - ராஜஸ்தான் ர ஆயல்ஸ் - ஜெய்ப்பூர் - இரவு 8.00 மணி, 

மே 12 - டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை - இரவு 8.00 மணி, 

மே 18 - கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - சென்னை - இரவு 8.00 மணி, 

மே 22 - ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் - பெங்களூர் - மாலை 4.00 மணி.

ஐ.பி.எல்  போட்டியில் 9 ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. சூப்பர் கிங்ஸ் மோதும் 7 லீக் ஆட்டமும், இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி ஆட்டம் மே 27ம் தேதியும்,  இறுதிப்போட்டி மே 28ம் தேதியும்  சென்னையில் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்