முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வியால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்: முரளீதரன்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு,ஏப்.- 8 - உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்வியால் தங்கள் அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட முரளிதரன், உலகக் கோப்பையுடன் ஒரு நாள் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று முன்னதாகவே அறிவித்து விட்டார். எனவே அவருக்கு மகிழ்ச்சியாக விடை கொடுக்க வேண்டுமென இலங்கை வீரர்கள் எண்ணியிருந்தனர். 

ஆனால் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. இதனால் இலங்கை அணி கேப்டன் சங்ககாரா, துணை கேப்டன் ஜெயவர்த்தனே, அணி தேர்வு குழுவினர் என அனைவரும் அடுத்தடுத்து தங்கள் பதிவியில் இருந்து விலகினர். இந்நிலையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் இலங்கை அணி தோல்வியடைந்தது. அதன் பின்னர் கொழும்பில் முரளிதரன் கூறியதாவது, 

கடவுள் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விடுவதில்லை. மொத்தத்தில் அந்த நாள் எங்களுடையதாக இல்லை என்றார். உலகக் கோப்பையில் அடைந்த இந்த தோல்வி அணியை நிலைகுலைய செய்து விட்டது. இந்திய அணி வெற்றி பெற்றதில் கேப்டன் தோனிக்கு உள்ள பங்கு மகத்தானது. தோனி எந்த சூழ்நிலையிலும் பதட்டமோ, கோபமோ அடைய மாட்டார். அது அவரால் மட்டுமே முடியும். அதுதான் அவரது வெற்றியின் ரகசியம். சச்சின் டெண்டுல்கரும் சிறந்த பேட்ஸ்மேன். அவருக்கு பந்து வீசுவதும், ஆட்டமிழக்க செய்வதும் பெரும் சவாலான காரியம் என்றார் முரளிதரன். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்