முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிவில்லியர்சின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி எளிதான வெற்றி

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, ஏப். - 11 -  இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் கொச்சியில் நடைபெ ற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி தரப்பில் டிவில்லியர்ஸ் அதிரடி யாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அகர் வால், எஸ். திவாரி, கோக்லி ஆகியோர் அவருக்குப் பக்கபலமாக ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, பெங்களூர் பெளலர்கள் ஒருங்கி ணைந்து பந்து வீசி கொச்சி அணியின் ரன் குவிப்பைப் கட்டுப் படுத்தி னர். ஜாஹிர்கான், நான்ஸ், வெட்டோரி, தில்ஷான் மற்றும் கோக்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியின் 3 -வது லீக் ஆட்டம் கொச்சியில் உள்ள நேரு அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக  நடந்தது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொச்சி டஸ்கர்ஸ் கே ரளா அணியும் பலப்பரிட்சை நடத்தின. 

இந்தப் போட்டியில் பூவா தலையாவில் வெற்றி பெற்ற கொச்சி அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி சார்பில், பிரண்டன் மெக் குல்லம் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் இருவரும் ஆட்டத்தை துவக்கி னர். 

கொச்சி அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 161 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், 3 வீரர்கள் கால் சத ம் அடித்தனர். இதில் மெக்குல்லம் மற்றும் லக்ஷ்மண் இருவரும் நன்கு ஆடி அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். 

துவக்க வீரராக இறங்கிய மெக்குல்லம் அதிரடியாக ஆடி 32 பந்தில் 45 ரன்னைக் குவித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் கோக்லி வீசிய பந்தில் நான்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அவருக்கு பக்கபலமாக ஆடிய லக்ஷ்மண் 29 பந்தில் 36 ரன்னை எடுத் தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, ஹாட்கே 21 பந்தில் 27 ரன்னையும், ஜடேஜா 16 பந்தில் 23 ரன்னையும், ஜெயவர்த்த னே 18 பந்தில் 18 ரன்னையும் எடுத்தனர். 

ராயல் சேலஞ்சர்ஸ் அணி தரப்பில், ஜாஹிர்கான் 28 ரன்னைக் கொடுத் து 1 விக்கெட் எடுத்தார். தவிர, நான்ஸ், வெட்டோரி, தில்ஷான் மற்று ம் கோக்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

பெங்களூர் அணி 162 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இல க்கை கொச்சி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்னை எடுத்தது. 

இதனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக் கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த லீக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 2 புள்ளிகள் பெற்று முன்னிலை பெ ற்றுள்ளது. 

பெங்களூர் அணி தரப்பில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டிவில்லி யர்ஸ் அதிரடியாக ஆடி, 40 பந்தில் 54 ரன்னை எடுத்தார். தவிர, அகர் வால் 24 பந்தில் 34 ரன்னையும், கோக்லி 18 பந்தில் 23 ரன்னையும், எஸ். திவாரி 24 பந்தில் 26 ரன்னையும் எடுத்தனர். 

கொச்சி அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் 28 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, ஜடேஜா, வினய்குமார் மற்றும் கோம்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப் பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்