முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமரச திட்டத்திற்கு லிபியா அதிபர் கடாபி சம்மதம்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, ஏப்.13 - லிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுகட்டும் வகையில் ஆப்பிரிக்கா ஒன்றியம் தயாரித்துள்ள சமரச திட்டத்திற்கு லிபியா அதிபர் கடாபி சம்மதம் தெரிவித்துள்ளதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜூமா தெரிவித்தார்.

ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள லிபியாவில் கடந்த 10 ஆண்டுகளாக அதிபராக இருந்த கடாபியை பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை அவர் ராணுவத்தை கொண்டு ஒடுக்க முயன்றபோது அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. போரை நிறுத்துமாறு கடாபியை ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. போர்நிறுத்தம் செய்வதாக கூறிய கடாபி போராடிய மக்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தது. சொந்த நாட்டு  மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால், ஆதரவற்ற மக்களை காப்பாற்ற அமெரிக்கா ஆதரவு நேட்டோ என்ற ராணுவ கூட்டு நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தியது. கடாபியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆயத உதவியையும் செய்துவருகிறது.

உள்நாட்டு கலவரத்தை நிறுத்துவதற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் சமரச திட்டத்தை தயாரித்துள்ளது. இத்திட்டத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்த தென்னாப்பிரிக்க அதிபர் ஜூமா தலைமையில் 12 ஆப்பிரிக்க நாடுகளின் அதிபர்கள் லிபியா சென்று கடாபியை சந்தித்து பேசினர். அதன் பின்னர் அவர் பேசுகையில் நேட்டோ விமான தாக்குதலை நிறுத்தவேண்டும் மற்றும் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு கொடடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்க அதிபர் ஜூமா கூறுகையில், எங்களது சமரச திட்டத்தை கடாபி ஏற்றுக்கொண்டார். எங்கள் தூதுக்குழு கடாபி எதிர்ப்புக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த பெங்காசி நகருக்கு சென்றுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் ஜூமாவிடம் கடாபி பதவி விலகுவாரா என்று நிருபர்கள் கேட்ட போது, ஆப்பிரிக்க ஒன்றிய கமிஷனர் ரம்தனே லமரா பதிலளிக்கையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது என்றும் இது தொடர்பான ஆலோசனை நடந்த போது நான் அங்கு இல்லை, இது ரகசியம் என்றும் குறிப்பிட்டார். கடாபியை பலமணி நேரம் ஜூமா சந்தித்துப்பேசினார். அப்போது 4 ஆப்பிரிக்கா நாடுகளின் தலைவர்களும் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago