முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா நகல் தயாரிப்பு குழுவில் தலித் இடம்பெற கோரிக்கை

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

நாக்பூர், ஏப்.13 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நகல் திட்டத்தை  தயாரிப்பதற்கான குழுவில் தலித் இனத்தைச் சேர்ந்தவரும் இடம்பெற வேண்டும் என்று லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் லஞ்ச லாவண்ய ஊழல் போன்றவை தலைவிரித்தாடுகின்றன. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி அன்னா ஹசாரே என்ற சமூக சேவகர் சமீபத்தில் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். இதையடுத்து இந்த லோக்பால் மசோதா நகல் திட்டத்தை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன் காரணமாக அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார். லோக்பால் நகல் மசோதா தயாரிப்புக்காக அமைச்சர்கள் மற்றும் சமூக சேவகர்கள் ஆகியோர் அடங்கிய  குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க உள்ளது. இந்த குழுவில் தலித் இனத்தைச் சேர்ந்தவரையும் சேர்க்க வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கேட்டுக்கொண்டுள்ளார். 

நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம்விலாஸ் பஸ்வான், பிரபல சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிராவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஊழலுக்கு எதிரான மசோதா நகல் தயாரிப்பு குழுவில் தலித்துக்கு முக்கியத்துவம் தராதது சரியல்ல என்று குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலும் கூறியுள்ளார் என்பதை ராம்விலாஸ்பஸ்வான் சுட்டிக்காட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்