முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி என்கவுண்டர் சம்பவம் - 28 போலீசார் மீது வழக்கு பதிவு

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

படோய், ஏப்.13 - உத்தரபிரதேசத்தில் போலி என்கவுண்டர் நடத்தி தலித் ஒருவரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக 28 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் மத்திய பிரதேச மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்கிற லாலாவ் என்ற தலித் ஒருவரை உத்தரபிரதேச மாநிலம் படவாப்பூர் கால்வாய் அருகே மத்திய பிரதேச போலீசார் என்கவுண்டர் நடத்தி சுட்டுக்கொன்றனர். இந்த என்கவுண்டர் போலியான என்கவுண்டர் என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. விஜய் ஒரு தேடப்படும் கிரிமினல் குற்றவாளி என்றும் அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன என்றும் அவரை பிடித்துக்கொடுத்தால் 5000 சன்மானம் வழங்கப்படும் என்றும் மத்திய பிரதேச போலீசார் அறிவித்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே அவனை கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். என்றாலும் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு விஜயின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக தேசிய மனித உரிமை கமிஷனுக்கு விஜயின் மனைவி புகார் செய்தார். தேசிய மனித உரிமை கமிஷன் இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து என்கவுண்டர் நடத்திய 28 போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து வழக்கு தொடர்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்