முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு எதிரான 2-வதுடெஸ்ட் போட்டி மே.இ.தீவு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

குல்னா, நவ. - 27 - வங்கதேச அணிக்கு எதிராக குல்னாவி ல் நடைபெற்ற 2-வது டெஸ்டிலும் மே. இ.தீவு அணி 10 விக்கெட் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்று தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில மே.இ.தீவு அணி தரப்பில், சாமுவேல்ஸ் இரட்டை சதம் அடித்தார். தவிர, டி. பிராவோ மற்றும் சந்தர்பால் ஆகியோர் சதம் அடித்தனர். இதனால் அந்த அணி பிரமாண்ட ஸ்கோரை எட்டியது. பின்பு பெளலிங்கின் போது, எட்வர்ட்ஸ், பெஸ்ட்,சம்மி மற்றும் பெர்மால் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வங்க தேச அணியின் ரன் குவிப்பை கட்டுப் படுத்தினர். வங்கதேசம் மற்றும் மே.இ.தீவு அணிக ளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குல்னாவில் உள்ள ஷேக் அபு நாசர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முன்னதாக டாசி ல் வெற்றி பெற்ற வங்கதேச அணி முத லில் களம் இறங்கியது. இறுதியில் அந்த அணி 91. 1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 387 ரன்னை எடுத் தது.
வங்கதேச அணி தரப்பில், அறிமுக வீர ரான அபுல் ஹாசன் 10 - வது வீரராக களம் இறங்கி சதம் அடித்தார். அவர் 123 பந்தில் 113 ரன்னை எடுத்தார். தவிர, மக்மதுல்லா 97 பந்தில் 76 ரன்னையும், நாசிர் ஹொசைன் 68 பந்தில் 52 ரன் னையும், முஸ்பிகர் ரகீம் 81 பந்தில் 38 ரன்னையும், சக்ரியார் நபீஸ் 26 ரன்னையும் தமீம் இக்பால் 32 ரன்னையும் எடு த்தனர்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே. இ.தீவு அணி வங்கதேச அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி பிரமா ண்ட ஸ்கோரை எடுத்தது. அந்த அணி சார்பில் 1 வீரர் இரட்டை சதமும், 2 வீர ர்கள் சதமும் அடித்தனர். இறுதியில் அந்த அணி 200.3 ஓவரில் 9 விக்கெட் இழ ப்பிற்கு 648 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது.
சாமுவேல்ஸ் 455 பந்தில் 260 ரன் எடு த்தார். சந்தர்பால் 282 பந்தில் 150 ரன் னையும், டி பிராவோ 288 பந்தில் 127 ரன்னையும் எடுத்தனர். தவிர, கெய்ல் 25 ரன்னையும், கீப்பர் ராம்டின் 31 ரன் னையும் எடுத்தனர்.
பின்பு 2- வது இன்னிங்சை ஆடிய வங் கதேச அணி 70.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 287 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர் கள் அரை சதம் அடித்தனர்.
இந்த இன்னிங்சில் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நசீர் ஹொசைன் இருவரும் சத வாய்ப்பை நழுவவிட்டனர். ஹசன் 117 பந்தில் 97 ரன்னை எடுத்தார்.ஹொசை ன் 157 பந்தில் 94 ரன் எடுத்தார். தவிர, தமீம் இக்பால் 28 ரன்னையும், சக்ரியார் நபீஸ் 21 ரன்னையும், எடுத்தனர்.
மே.இ.தீவு அணி சார்பில், பெஸ்ட் 40 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட் எடுத் தார். தவிர, பெர்மாள் 3 விக்கெட்டும் எட்வர்ட்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
மே.இ.தீவு அணி 2-வது இன்னிங்சில் 27 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை வங்கதேசம் வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 4.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் னை எடுத்தது.
இதனால் அந்த அணி 2- வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மே.இ.தீவு அணி தரப்பில், கெய்ல் 20 ரன்னையும், போவெல் 9 ரன்னையும் எடுத்தனர். இந்தப் போட்டியின் நாயக னாக சாமுவேல்சும், தொடர் நாயக னாக சந்தர்பாலும் தேர்வு செய்யப்பட்டனர்.
----------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்