முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி வங்கதேசஅணி 160ரன் வித்தியாசத்தில் வெற்றி

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

குல்னா, டிச. - 3 - மே.இ.தீவுக்கு எதிரான 2 - வது ஒரு நா ள் போட்டியில் வங்கதேச அணி 160 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.  இந்தப் போட்டியில் வங்கதேச அணி தரப்பில் இளம் வீரரான அனாமுல் ஹக் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப் பம்சமாகும். அவருக்கு பக்க பலமாக கேப்டன் முஸ்பிகர் ரகீம் , மொமினுல் ஹக் மற்றும் மொர்டஜா ஆகியோர் ஆடினர்.  பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான சோகக் கஜி மற்றும் அப்துர் ரசாக் இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட் எடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக மொர்டஜா, நயீம் இஸ்லாம் மற்றும் மக் மதுல்லா ஆகியோர் பந்து வீசி அணிக் கு வெற்றி தேடித் தந்தனர். வங்கதேசம் மற்றும் மே.இ.தீவு அணிக ளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் போட்டி குல்னா நகரில் உள்ள ஷேக் அபு நாசர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.  முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி இந்தப் போட்டியில் நன்கு ஆடி சவாலான ஸ்கோரை எடுத்தது. துவக்க வீரராக இறங்கிய அனாமுல் ஹக் அமர் க்களமாக ஆடி அனைவரின் பாராட்டி னையும் பெற்றார்.  19 -வயதான அவர் 2- வது ஒரு நாள் போட்டியிலேயே சதம் அடித்தது குறிப் பிடத்தக்கது. இது அவருக்கு முதலாவ து சதமாகும். அவர் 145 பந்தில் 120 ரன் னை எடுத்தார். இதில் 13 பவுண்டரி மற் றும் 2 சிக்சர் அடக்கம். 

கேப்டன் முஸ்பிகர் ரகீம் 87 பந்தில் 79 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்று ம் 1 சிக்சர் அடக்கம். தவிர, மொமினுல் ஹக் 29 பந்தில் 31 ரன்னையும், மொர்ட ஜா 18 ரன்னையும், எடுத்தனர். 

முன்னதாக தமீம் இக்பால் 5 ரன்னிலு ம், நயீம் இஸ்லாம் 6 ரன்னிலும் ஆட்ட ம் இழந்தனர். இதனால் அந்த அணி தடு மாறியது. பின்பு அனாமுல் ஹக் மற்று ம் கேப்டன் முஸ்பிகர் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி அணியை சரி வில் இருந்து மீட்டனர். 

அனாமு ல் ஹக் கேப்டன் ரகீமுடன் இணைந்து 3 -வது விக்கெட்டிற்கு 179 ரன்னையும், மொமினுல் ஹக்குடன் இணைந்து 69 ரன்னையும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தவிர, 3- வது விக்கெ ட்டிற்கு மேற்படி ஜோடி புதிய சாத னையும் புரிந்துள்ளது. 

மே.இ.தீவு அணி சார்பில் ராம்பால் 49 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத் தார். தவிர, ரஸ்செல் 1 விக்கெட் எடுத் தார். 

மே.இ.தீவு அணி 293 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை வங்கதேச அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 31.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 132 ரன்னை எடுத்தது. 

இதனால் வங்கதேச அணி இந்த 2- வது ஒரு நாள் போட்டியில் 160 ரன் வித்தி யாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொ  ண்ட இந்தத் தொடரில் 2 - 0 என்ற கண க்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

மே.இ.தீவு அணி தரப்பில், ஒரு வீரர் கூட அரை சதம் தாண்டவில்லை. டிவைன் பிராவோ அதிகபட்சமாக, 41 பந்தில் 28 ரன் எடுத்தார். தவிர, கெய்ல் 15 ரன்னும், சாமுவேல்ஸ் 16 ரன்னும், பொல்லார்டு 25 ரன்னும், கேப்டன் சம்மி 12 ரன்னும், நரீன் 10 ரன்னும் எடுத்தனர். 

வங்கதேச அணி சார்பில், சோகக் கஜி 21 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். அப்துர் ரசாக் 19 ரன்னைக் கொ டுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, மொர்டஜா, நயீம் இஸ்லாம், மக்மதுல் லா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக அனாமுல் ஹக் தேர்வு செய்யப் பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago